டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!

Default Image

டெல்லியில் இன்று 1,984 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று 1,984 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,73,098 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று 37  பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,272 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,40,703 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,123 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக  டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்