டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்…! நாய்களை தகனம் செய்யும் இடங்களில் மனிதர்களை தகனம் செய்ய ஏற்பாடு…!

Default Image

டெல்லியில், துவாரகா பிரிவு 29 இல் உள்ள ஒரு நாய் தகனம் செய்யும் இடத்தில், மனிதர்களை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றால்,  மருத்துவமனையிலேயே படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட  கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன. இதனால் அங்கு தகனம் செய்வதற்கு கூட இடமில்லாத படி திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் துவாரகா பிரிவு 29 இல் உள்ள ஒரு நாய் தகனம் செய்யும் இடத்தில், மனிதர்களை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி மாநகராட்சி துவாரகா பிரிவு 29 இல் மூன்று ஏக்கர் நிலத்தில், நாய்களை  தகனம் செய்யும் தளம் ஆறுமாதங்களுக்கு முன்பதாக கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அந்த தளம் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தற்காலிகமாக  மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் தளங்களை உருவாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தகனம் செய்யப்படும் சடலங்களின் எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் 800-க்கும் மேற்பட்ட சடலங்கள் வரை தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டெல்லியில் அதிகாரிகள் தகனம் செய்வதற்கான இடங்களை முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்