மகாராஷ்ட்ராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,000-ஐ நெருங்கவுள்ளது!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் மேலும் 265 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,22,118 ஆக உயர்ந்தது.
அம்மாநிலத்தில் இன்று 265 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,994 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 3.55 ஆக உள்ளது. மேலும் 7,543 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,56,158 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 60.68 சதவீதமாக உள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,50,662 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025