கொரோனா பாதிப்பிற்கு மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார்! கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர்களை தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி உயிரிழந்ததாக தற்போது, தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடகாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.