அமெரிக்காவை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு!

உலக அளவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பால் புதிதாக 79,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 960 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 781,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 3,619,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64,617 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகரிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே செல்வது இரண்டாவது நாளாக இந்தியா இன்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 17 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயர்ந்த கொரோனா பாதிப்பு 77,299 ஆக தான் இருந்தது. ஆனால் இந்தியாவில் அமெரிக்காவை விட அதிக அளவில், நாளுக்கு 79,457 பேர் என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. குணமாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் இறப்பு விகிதமும் பாதிக்கப்படுபவர்கள் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் நாடே அச்சப்பட வேண்டிய நிலையில் உள்ளது.