இந்தியாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 478 பேர் பலி…!

கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 478 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா பாதிக்கப்பட்ட 7,41,830 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், 52,847 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.