கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2 லட்சத்து 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்த கொரோனா வைரஸால், 2 லட்சத்து 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 93, 528 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025