கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு?
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவாழ் புதிதாக 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்பொழுது பல இடங்களில் கனமழை மற்றும் அதிகமான குளிர் நிலவினாலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 43,861 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 521 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் 8,727,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 128,686 பேர் உயிரிழந்துள்ளனர், 8,113,345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 485,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.