கொரோனா ஊரடங்கால் பறிபோன வேலை! ஈகோவை கழற்றி வைத்த பிரபல மேனேஜர்! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Published by
லீனா

கொரோனா ஊரடங்கால் வேலை பறிபோனதால், சித்தாள் வேலை செய்த மேனேஜர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு லட்சக்கணக்கான மக்களின் வேலையையும் பறித்துள்ளது. வேலை பறி போனதால் பலர் மனமுடைந்து தற்கொலைக்கு நேராக கூட சென்றுள்ளனர். ஆனால் மன உறுதியுடன் எதையும் எதிர் கொண்டால் வாழ்க்கை சுகமாக செல்லும் என்பதற்கு கேரள இளைஞர் ஒருவர் எடுத்துக்காட்டாக உள்ளார்.

ராபின் அந்தோணி என்பவர் கேரளாவின், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எம்பிஏ படித்தவர் ஆவார். இவர் மும்பையில் உள்ள டென்டல் கேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடுமையாக உழைத்து அதே கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அதன்பின் அவரது வாழ்க்கையில், நல்ல சம்பளம், ரிச்சான வாழ்க்கை  என்று ராபினின் வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் அவரின் வாழ்க்கையையும் ஒரு பக்கமாக புரட்டி போட்டது.  கொரோனா வைரஸ் தாக்கம், காரணமாக நான்கு மாதங்களுக்கு முன் வேலை இழந்த இவர் அதற்குப் பின் தனது வாழ்க்கையே மாறிப் போனதை எண்ணி துவண்டு போகாமல், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊரானஅடிமலிக்கு வந்தார்.

அங்கு இரு மாதங்களாக வேலை இல்லை கையில் பணமும் இல்லை முடிந்து போன நிலையில், குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாத இவர், ஒரு மேனேஜராக பணியாற்றிய இவரது வாழ்க்கையில்  ஆடம்பரமான உடைகள், ஷூக்கள், வாட்சுகள், செல்போன்கள் என  தனது ஆடம்பரங்கள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு தன் சொந்த ஊரிலேயே சித்தாள் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

சித்தாள் வேலை என்றாலும் நாளொன்றுக்கு ரூ.800 வரை சம்பளமாக வாங்கியுள்ளார். கேரளாவில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில், சித்தாள் வேலை பார்க்க ஆள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தாள் வேலை பார்ப்பதற்கு அங்கு வருபவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.

சித்தாள் வேலை பார்த்தாலும்,  மேனேஜராக தனது கையில் பணம் புழங்கியது போல, மீண்டும் பணம் புழங்க தொடங்கி இருப்பதால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறியுள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதோ ஒரு ஊருக்கு சென்று கஷ்டப்படுவதை விட சொந்த ஊரில் ஈகோவை இறக்கி வைத்துவிட்டு வேலை பார்க்கத் தொடங்கினால், நிம்மதியாக வாழமுடியும் என்பதற்கு ராபின் அந்தோணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.

Published by
லீனா

Recent Posts

ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?

ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?

சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…

13 mins ago

இந்த 3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

15 mins ago

தங்கம் விலை சற்று உயர்வு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…

30 mins ago

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…

36 mins ago

அமரன் வெற்றி! தனுஷுக்கு ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…

42 mins ago

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கிருந்து? எப்போது?

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…

48 mins ago