உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,370 ஆகவும், பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். மேலும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா எதிரொலியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது. இந்த நிலையில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் பல ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தாய் இறந்த செய்தி கேட்டும் பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரியின் கதை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் துப்பரவு பொறுப்பாளராக இருக்கிறார். இவரை போபால் பகுதிகளுக்கு உட்பட வீடுகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து கஷ்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, தொடர்ந்து பணியாற்றி முடிந்த பிறகே தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவரின் தாயை விட மதிப்புமிக்க எதுவுமில்லை. ஆனால் தாயிக்கு அடுத்து தாய் நாடு என்றும் காலை 8 மணியளவில் தாயின் இறப்பு குறித்த தகவல் அறிந்தேன். இறுதி சடங்கிற்கு மதியம் சென்று விட்டு, மீண்டும் பணிக்கு வந்துவிட்டேன் என தெரிவித்தார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…