கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் ஜன.31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கொரோனா கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு.
கொரோனா கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31 வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைவதால், ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31 வரை நீட்டிக்கப்டுகிறது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவில் ஜனவரி 31-ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும். ஓமைக்ரான் பரவலை பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் மாநில, மாவட்ட அளவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாம். ஓமைக்ரான் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளார்.
பண்டிகை கால கூட்டங்ளை கட்டுப்படுத்த, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மாநிலங்கள் பரிசீலிக்கலாம் என்றும் தொற்று பரவலை பொறுத்து மாவட்டம் அல்லது மாநில அளவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அவர் எளிதியுலா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.