மது போதையில் ரெயின் கோட் என நினைத்து மருத்துவமனையிலிருந்து பிபிஇ கிட் திருடியவருக்கு கொரோனா உறுதி!
மகாராஷ்டிராவில் குடிகாரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்களுக்கான பிபிஇ கிட்டை திருடியுள்ளார், மேலும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்டத்தில் மாயோ எனும் மருத்துவமனையில் குடிகாரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் குடிபோதையில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது காலில் காயமுற்று ஆரம்ப சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியஅவர் குடிபோதையில் ரெயின்கோட் என்று நினைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு உபகரணம் ஆகிய பிபிஇ கிட்டை திருடியதாக கூறப்படுகிறது.
அதை அவர் ரெயின் கோட் என கூறி அணிந்திருந்ததை கண்டா மக்கள் விவரம் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பொழுது அந்த இடத்திற்கு விரைந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் அவரிடம் கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். அப்பொழுது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பம் மற்றும் உறவினர்களது தொடர்புகளை கண்டுபிடித்து சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.