பயோகன் தலைவி கிரன் மஜும்தாருக்கு கொரோனா உறுதி!
பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் இந்தியாவில் பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலரும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் என்பவருக்கு நேற்று இரவு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் கொரோனாவிலிருந்து நலம் பெறலாம் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் விரைவில் குணம் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளனர்.