கொரோனா உறுதி செய்யப்பட்ட கேரள பெண்.! ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய நெகிழ்ச்சி சம்பவம்.!
கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொது சேவை ஆணைய வேட்பாளரான கோபிகா கோபன் கடந்த சில நாட்களாக உதவி பேராசிரியர் பதவிக்கு அதாவது பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். அந்த தேர்வு முதலில் ஜுலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
அதனையடுத்து, பி.எஸ்.சி தேர்வு நவம்பர் 2-ஆம் தேதி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சனிக்கிழமை கோபிகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டார் .
இந்த நிலையில், திங்கட்கிழமை நடைபெறவிருந்த தேர்வை எழுத முடிவு செய்த கோபிகா, கேரளா பொது சேவை ஆணையம் அரசு பள்ளியில் வைத்து நடத்திய தேர்வில் கோபிகா கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். அதாவது பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்து கொண்டு தனது தேர்வை எழுதியுள்ளார்.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி-ஆன ஷாஷி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து துன்பங்களை எதிர் கொண்டு தனது ஆசையை நிறைவேற்ற கோபிகா எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்றும், எனது அங்கத்தினர்கள் சார்பாக துணிச்சலான மற்றும் உறுதியான முடிவை எடுத்த கோபிகாவிற்கு எனது வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது கோபிகாவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
What admirable resolve to face adversity & fulfil her aspirations! My salutations to the brave & determined Gopika Gopan, one of my constituents. #covid19 #WeShallOvercome pic.twitter.com/Muyxryi77R
— Shashi Tharoor (@ShashiTharoor) November 3, 2020