ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரியானாவின் சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா அவர்களுக்கும் அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் அணில் விஜ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சட்டமன்றத்தின் பருவமழை அமர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்பொழுது சட்டமன்ற சபாநாயகர் குப்தா மற்றும் மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் துணை சபாநாயகராகிய ரன்பீர் கங்வா நடக்கவிருக்கும் பருவமழை அமர்வுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என அனைத்து சட்டமன்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே வரும் 26-ம் தேதி நடைபெறும் பருவமழை அமர்வில் கலந்துகொள்ள முடியும், அமர்வுக்கு வருவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டு எதிர்மறை என குறிப்பிடப்பட்டால் அந்த சான்றிதழுடன் வரவேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…