நாகாலாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி.!
இந்தியாவில் கொரோனா வைரசால் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 857 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1985, டெல்லியில் 1154, தமிழ்நாடு 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வராத நிலையில், முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாகாலாந்து மாநிலம் திமாபூரை சேர்ந்த நபர், கொல்கத்தா சென்று திரும்பியுள்ளார். பின்னர் கொரோனா அறிகுறியுடன் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்மூலம் இந்தியாவில் 32 மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.