கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதி.!
இந்தியாவில் கொரோனா வைரஸால் 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 157 பேர் குணமடைந்தனர்.மேலும் கொரோனாவால் 56 பேர் உயிரிழந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா மாநிலமும் ஓன்று. இம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று காலை வரை 286 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சில மணிநேரத்திற்கு முன் கேரளா மாநில முதலமைச்சர் பிரணாய் விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,கேரளா மாநிலத்தில் புதியதாக 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
#CoronaUpdate | 9 new cases of COVID19 in Kerala today #COVID19 #Covid19Kerala #CoronaOutbreak
— Shailaja Teacher (@shailajateacher) April 3, 2020
இதனால் கேரளா மாநிலத்தில் மொத்தமாக 295 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கேரளா முதல்வர் பிரணாய் விஜயன் தெரிவித்தார்.கேரளா மாநிலத்தில் 27 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்,மேலும் 2 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.