கர்நாடகாவில் ஒரே 5,007 பேருக்கு கொரோனா..110 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் நேற்று ஒரே 5,007 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,724 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஒரே நாளில் 2,037 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 31,347 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 52,791 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025