கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா உறுதி.!
கேரளாவில் ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக 3 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களள் கொரோனாவால் பாதிக்கபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்நிலையில், இன்று 12 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 384 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 24,549 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 2,058 பேர் குணமடைந்தனர். இதுவரை 70,921 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.