தலைநகரில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,00,823 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 749 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 72,088 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 71.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 25,620 பேர் கொரோன தோற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025