ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த, அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது. அதில் 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,820 ஆக உள்ளது.
மேலும் 9,211 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,15,416 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, 85,130 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025