கொள்கை முடங்கிய அரசாங்கத்தால் கொரோனாவை அழிக்க முடியாது – ராகுல் காந்தி!
கொள்கை முடங்கிப்போன அரசாங்கத்தால் கொரோனா மீது வெற்றி பெற முடியாது என ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து கொண்டிருக்கின்றனர். அதிலும், கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பவர்களை விட மக்கள் அதிகமாக ஆக்ஸிஜன் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் தான் தற்போது உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்கை முடங்கிய அரசாங்கத்தால் கொரோனாவின் மீது வெற்றிபற முடியாது எனவும், இனியாவது அதை எதிர் கொள்ளுங்கள் போலியானவற்றை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
A policy paralysed GOI cannot secure victory over the virus.
Face it. Don’t fake it. pic.twitter.com/JuWTDwOezn
— Rahul Gandhi (@RahulGandhi) May 3, 2021