கேரள கலெக்டரிடம் பேட்டி கண்ட பிரபல தொலைக்காட்சி நிருபரை தாக்கிய கொரோனா!

Published by
லீனா

கேரள கலெக்டரிடம் பேட்டி கண்ட பிரபல தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா தொற்று.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, கேரளாவில் காசர்கோடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சஜித் பாபு.  கடந்த 19ந் தேதி இவரிடம் பிரபல தொலைக்காட்சி சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளார்.

இந்நிலையில், இவரிடம் பேட்டி எடுத்த நிருபருக்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் காசர்கோடு ஆட்சியர் பாபுவை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.   மேலும், அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இதனையடுத்து, நிருபருடன் பணிபுரிந்த புகைப்படக்காரர், வாகன ஓட்டுனர் மற்றும் 2 பணியாளர்கள் என 4 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495-ஆக உயர்ந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

7 minutes ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

28 minutes ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

39 minutes ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

1 hour ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

2 hours ago

பந்து வீச்சில் மிரட்ட போகும் பல்தான்ஸ்! மும்பையின் படைப்பலம் இதுதான்!

மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…

2 hours ago