ஒரே நாளில் இந்தியாவில் 89 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 43,67,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 73,923 பேர் உயிரிழந்துள்ளனர்.
33,96,027 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 8,97,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 89,852 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 1,107 பேர் உயிரிழந்துள்ளனர்.