இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், உலகளவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 613,213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,906,690 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில இந்தியா உள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 1,154,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,099 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 724,702 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 36,810 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 596 பேர் உயிரிழந்துள்ளனர்.