இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு;58 பேர் பலி.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 913 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 795 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,839 ஆக பதிவாகியுள்ளது.
குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்:
அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1280 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,24,96,369 ஆக அதிகரித்துள்ள நிலையில்,கொரோனாவுக்கு 58 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,416 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா சிகிச்சை:
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,054 ஆக குறைந்துள்ளது.
தடுப்பூசி எண்ணிக்கை:
மேலும், நாட்டில் இதுவரை 1,84,87,33,081 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரேநாளில் 16,17,668 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…