இந்தியாவில் இதுவரை 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம்!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,11,74,322 லிருந்து 3,12,16,337 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,977 பேர் குணமடைந்துள்ளனர்.
- இதுபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 3,998 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 2.27%, தொடர்ந்து 30 நாட்களுக்கு 3% க்கும் குறைவாக உள்ளது.
- இதுவரை மொத்தம் கொரோனா பாதிப்பு 3,11,74,322 லிருந்து 3,12,16,337 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,90,687 ஆக உள்ளது.
- குணமடைந்தோரின் விகிதம் 97.7% ஆகவும், உயிரிழப்பின் விகிதம் 1.34% ஆகவும் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,14,482 லிருந்து 4,18,480 ஆக உயர்ந்துள்ளது.
- மகாராஷ்டிராவில் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு சேர்க்கப்பட்டதால் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
- நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4,07,170 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டில் இதுவரை 41,54,72,455 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.