#Breaking:மக்களே கவனம்…மீண்டும் மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு;ஒரே நாளில் இவ்வளவு பேருக்கா?..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,549 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,581 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 30 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,10,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை:
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,543 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தோர்:
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,741 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,70,515 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 25,106 ஆக இருந்த நிலையில்,தற்போது 23,913 ஆக குறைந்துள்ளது.
தடுப்பூசி:
நாடு முழுவதும் இதுவரை 1,81,56,01,944 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 30,58,879 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.