கேரளாவில் 14,672 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
- கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 14,672 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,02,792 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,672 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது.
21,429 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, கேரளாவில் இதுவரை 24,62,071 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடதக்கது. மேலும், தற்போது கேரளாவில் 1,60,653 பேர் கொரோனா வார்டில் நோய் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.