மருத்துவமனைகளில் தனக்கு படுக்கை வசதி இல்லாமல் அனுமதிக்கப்படாததால் விரக்தியில் கொரோனா பாதித்த பெண்மணி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியா முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநில அரசுகள் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்க முடியாமல் திணறி வருகிறது. மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் மற்றும் தேவையான உபகரணங்களும் இல்லாமல் மருத்துவர்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் புனேவில் உள்ள 41 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளிலும் சென்று மருத்துவம் செய்வதற்காக கேட்டபொழுது படுக்கை வசதி இல்லை என்பதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மேலும் நோயால் அவதிப்பட்டு வாழ்வதற்கு உயிரிழப்பது மேல் என அப்பெண்மணி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்பெண்மணியின் கணவரிடம் இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த பொழுது அவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாததால் தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…