கொரோனா பாதிக்கப்பட்ட மணமகன், பிபிஇ உடையுடன் நடைபெற்ற திருமணம் – வீடியோ உள்ளே!

Default Image

நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகளும் பிபிஇ உடையணிந்து அக்னியை வலம் வந்து திருமணம் செய்துள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனவால் இறப்பவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் இல்லாமலும் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமலும் சிகிச்சை பெறமுடியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியிலும் ஏற்கனவே முன் குறிக்கப்பட்ட திருமணங்களும் நடந்து வருகிறது ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கே திருமணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் வசித்து வரக்கூடிய ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நிச்சயம் நடைபெற்று முடிந்த பின்பு மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் திருமணத்தை நிறுத்தி விட மனமில்லாமல் திருமண வீட்டார் கொரோனா தொற்று இருந்தாலும், பாதுகாப்பாக இருக்க பயன்படுத்தக் கூடிய பிபிஇ உடையணிந்து திருமணம் செய்துள்ளனர். பிபிஇ உடையுடன் மணமகன் மற்றும் மணமகள் அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொள்ளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்