இந்தியாவின் மிக நெருக்கமான மும்பை தாராவி பகுதியில் ஒருவர் கொரோனாவால் பலி.!
இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரில் மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும் தாராவி பகுதியை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமணியல் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
5 கிமீ பரப்பளவில் 10 லட்சம் பேர் வசிக்கும் தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் அங்குள்ள பலருக்கு பரவியிருக்கும் என அச்சம் நிலவுகிறது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.