இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்தது!

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஏற்கனவே 550 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளது.