சக பயணிக்கு கொரோனா – அச்சத்தில் விமானத்திலிருந்து குதித்த விமானி!
உலகம் முழுவதையுமே இந்த கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தி வைத்துள்ளது. இதனால் எங்கு சென்றாலும் கொரோனா, கொரோனா என்ற பேச்சுதான் அதிக அளவில் பேசப்படுகிறது. மக்கள் தெருவில் நடக்கையில் கூட, எதிரில் செல்பவர்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே பலர் மற்றவர்களிடம் பேசுவதை தற்போது தவிர்த்து விட்டனர்.
இந்நிலையில், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்பு கொண்ட ஒரு வெளிநாட்டு பயணி பயணம் செய்வதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த விமானத்தில் அந்த செய்தி பரவியதை அடுத்து தனக்கு முன் இருக்கையில் இருந்த நபருக்கு தான் கொரோனா பாதிப்பு இருப்பதாக நினைத்து சந்தேகப்பட்டுள்ளார் அந்த விமானி.
இதனை தொடர்ந்து மக்களை இறக்கி கொண்டிருக்கும் பொழுது பின்வாசல் வழியாக பொறுமையாக இறங்காமல், அவசர வழியாக விமானத்தை ஓட்டும் ஓட்டுநரின் அறை வழியாக கீழே குதித்துள்ளார். இதை ஒருவர் புகைப்படம் எடுத்து இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விமானி சந்தேகப்பட்ட அந்த குறிப்பிட்ட நபரை மருத்துவ குழுவினர் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.