இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,43,72,907லிருந்து 2,46,84,077 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 4,077 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் 3,62,437 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,07,95,335 ஆக உள்ளது. தற்போது 36,18,458 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 18,22,20,164 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் ஐந்து மாநிலங்களில் கர்நாடகா 41,664 பேரும், மகாராஷ்டிரா 34,848 பேரும், தமிழகம் 33658 பேரும், கேரளா 32,680 பேரும், ஆந்திரா 22,517 பேரும் உள்ளன.
புதியதாக பத்திக்கப்பட்டவர்களில் 53.15% பேர் இந்த ஐந்து மாநிலங்களிலிருந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மட்டுமே 13.39% பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,077 உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 960 பேர் அதிகபட்ச உயிரிழந்துள்ளன, அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் 349 பேர் இறந்துள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…