#BREAKING :கொரோனா 2-வது அலை சூறாவளி போல் தாக்குகிறது.., மோடி பேச்சு..!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில்
- கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும் முன் களப் பணியாளர்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்.
- தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும்
- கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
- உங்களது வருத்தங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
- கொரோனா 2-வது அலை சூறாவளி போல் நாட்டைத் தாக்கி வருகிறது.
- இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
- இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது.
- ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை பூர்த்தி செய்துள்ளோம்.
- முகக்கவசம் முதல் வெண்டிலட்டர் தயாரிப்பு வரை கடந்த சில மாதங்களில் நாம் பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.
- புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களை விட்டு வெளியேற வேண்டாம்.
- பொருளாதாரம் பாதிக்காத வகையில் நாட்டு மக்கள் உயிரை காக்கவே அரசு போராடி வருகிறது.
- கொரோனா வைரஸ் நாட்டுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
- இந்தியா மீண்டும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.
- கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை இரண்டாம் அலை கொரோனாவில் இல்லை.
- நமது பொறுமையை இழந்து விடக்கூடாது.
- உலகிலேயே மிகக் குறைந்த விலையில் தடுப்பூசி இந்தியா தயாரித்தது.