இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 15,609,004 உயர்ந்துள்ளது. நேற்று வரை 2.5 லட்சத்தை கடந்து வந்த கொரோனா இன்று 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,86,276 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,32,69,863 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,020 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182,570. ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,31,06,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நாடு முழுவதும் 26,94,14,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் சூரத் போன்றவை கிட்டத்தட்ட மருத்துவமனை படுக்கைகள் இல்லாமல் போய்விட்டன. ஐ.சி.யூ க்கு நோயாளிகள் மாற்றப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.
டெல்லி:
டெல்லியில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் செவ்வாயன்று தங்கள் ஆக்ஸிஜன் இருப்பு சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்திருந்தது.கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 28,395 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா:
இதற்கிடையில்,மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கிற்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 62,097 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா (3,960,359), கேரளா (1,197,301), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), ஆந்திரா (942,135).
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…