#BigBreaking:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா 2020 பேர் மரணம்

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 294,290  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 15,609,004 உயர்ந்துள்ளது. நேற்று வரை 2.5 லட்சத்தை கடந்து வந்த கொரோனா இன்று 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,86,276 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,32,69,863 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,020 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182,570. ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,31,06,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.நாடு முழுவதும் 26,94,14,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலகாபாத் மற்றும் சூரத் போன்றவை கிட்டத்தட்ட மருத்துவமனை படுக்கைகள் இல்லாமல் போய்விட்டன. ஐ.சி.யூ க்கு நோயாளிகள் மாற்றப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும்.

டெல்லி:

டெல்லியில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் செவ்வாயன்று தங்கள் ஆக்ஸிஜன் இருப்பு சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று தெரிவித்திருந்தது.கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 28,395 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா:

இதற்கிடையில்,மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கிற்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 62,097 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா (3,960,359), கேரளா (1,197,301), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), ஆந்திரா (942,135).

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu
edappadi and amit shah Nainar Nagendran
ADMK MP Thambidurai say about ADMK - BJP Alliance
d jeyakumar about bjp
Mitchell Starc About RR