பயாலஜிக்கல் இ நிறுவனதின் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை குறைப்பு.
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.840 லிருந்து ரூ.250 ஆக குறைத்து பயாலஜிக்கல் இ நிறுவனம் அறிவித்துள்ளது. வரி, நிர்வாக கட்டணம் சேர்த்து ஒரு டோஸ் விலை ரூ.400 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, தனியார் தடுப்பூசி மையங்களில், தடுப்பூசியின் இறுதிப் பயனர்களுக்கு வரி மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட, ஒரு டோஸ் ரூ.990 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், நாட்டில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்கியபோது, அரசு தடுப்பூசி திட்டத்திற்காக Corbevax தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு அதன் விலை ரூ.145 நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Corbevax க்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…