கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு.
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை இரு தவணையாக செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக (பூஸ்டர் டோஸாக) Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் அல்லது 26 வாரங்கள் முடிந்த பிறகு, Corbevax பூஸ்டர் டோஸ் செலுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனம் கார்பேவாக்ஸ் மருந்தை கண்டுபிடித்துள்ளது. பொது பயன்பாட்டுக்காக இதுவரை 10 கோடி டோஸ்களை இந்நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.
கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, கொரோனா பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கான கார்பேவாக்ஸ்-யின் விலை சரக்கு மற்றும் விற்பனை வரி உட்பட ரூ.250 என்றும் இறுதிப் பயனருக்கு, தடுப்பூசியின் விலை வரிகள் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட ரூ.400 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…