Categories: இந்தியா

பதவியை காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி சம்மதம்..!

Published by
Dinasuvadu desk

மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரஸ் வசமாகிறது.

Image result for கர்நாடகாவில் துணை முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி சம்மதம்கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் தலைமையுடனான இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் இணைந்து பணியாற்றுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக, சந்திப்பின்போது உடனிருந்த கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஒருமுறை காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைந்து, அது பாதியிலேயே முறிந்தது போன்ற கடந்த கால கசப்புணர்களை மறந்து செயல்பட காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சரும் பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
Dinasuvadu desk

Recent Posts

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

7 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

10 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

12 hours ago