காற்றோட்ட வசதியுடன் கூடிய “பிபிஇ கிட்” ஒன்றை மும்பையின் கே.ஜே. சோமையா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில்,தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில்,மும்பையின் கே.ஜே.சோமையா பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ்(வயது 19) என்பவர்,பிபிஇ கிட் உடையில் ஒரு சிறிய காற்றோட்ட வசதி முறையை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து,மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் கூறுகையில்,”என் அம்மா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு மருத்துவர். அவர் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பியபின்,பிபிஇ உடை அணிவதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைப் பற்றி கூறினார்.அதனால்,கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு உதவிடும் வகையில்,பிபிஇ கிட் உடையில் ஒரு சிறிய காற்றோட்ட வசதி முறையை உருவாக்க நினைத்தேன்.
அதன்படி,தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTEDB) ஆதரவைப் பெற்று,ஆர்ஐஐடிஎல்லில் தலைமை கண்டுபிடிப்பாளர் மற்றும் புனேவின் டசால்ட் சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான கவுரங் ஷெட்டி உதவியுடன்,”கோவ்-டெக் வெண்டிலேசன் அமைப்பு” என்ற கருவியை கண்டுபிடித்தேன்.இதில்,6 முதல் 8 மணி நேரம் நீடிக்கும் லித்தியம் அயன் பேட்டரி வசதியுள்ளது.
அதன்படி,இந்த பெல்ட் போன்ற கருவியை பிபிஇ உடையுடன் இணைத்து அணிந்து கொள்ளலாம்.அதனால்,இந்த பிபிஇ கிட் உடைக்குள் இருக்கும்போது,விசிறியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போன்று இருக்கும்.
மேலும்,நம்மைச் சுற்றியுள்ள காற்றை,சுத்தமான காற்றாக மாற்றி பிபிஇ உடைக்குள் அனுப்புகிறது.அதாவது,100 விநாடிகளுக்கு ஒரு முறை,பயனருக்கு புதிய சுத்தமான காற்றினை வழங்குகிறது.
மேலும்,பல்வேறு பூஞ்சை தொற்றுநோய்களிலிருந்தும் இந்த வென்டிலேசன் கருவி பாதுகாக்கிறது”,என்று தெரிவித்தார்.
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…