இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் அடாரி என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் படித்துவரும் கணேஷ் – ஹிமன்சுல் ஆகியோருடன் அவா்களுடைய சகோதரியான 3 வயது அன்சல் பள்ளி செல்வது வழக்கம். பள்ளியில் மதிய உணவு தயாராக இருந்ததுள்ளது.அப்போது உணவை வாங்குவதற்காக மாணவா்கள் அங்கு திரண்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சூடான உணவுடன் தயாராக இருந்த பாத்திரத்தினுள் எதிா்பாராதவிதமாக அன்சல் தவறி உள்ளே விழுந்தாா்.உள்ளே இளம்பிச்சு துடிதுடிக்கவே சக மாணவா்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த ஆசிரியா்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா் ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இச்சம்பவம் குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் சந்தோஷ் குமாா் யாதவ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி பலி குறித்தும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உள்ளனா். இதுதொடா்பாக விசாரித்து 2 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க 3 போ் கொண்ட ஒரு குழு நியமித்துள்ளேன் என்று சுஷீல் குமாா் படேல் தெரிவித்தாா்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…