#BREAKING: அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை…!
எரிவாயு சிலிண்டர் விலை விலை கடுமையாக குறைந்துள்ளது, அட ஆமாங்க… வணிக பயன்பாட்டின் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
மாதம் முதல் நாளில் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நுகர்வோருக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கடந்த மாதம் ரூ.2,021.50க்கு விற்கப்பட்ட 19 கிலோ வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.84.50 குறைக்கப்பட்டு ரூ.1,937 என விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1180.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சிலிண்டர் விலை குறைப்பு முடிவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உள்நாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டது. அதன்பிறகு வீட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
டெல்லி:
டெல்லியில் வணிக எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.83.5 குறைந்து ரூ.1773 ஆக விற்க்கப்படுகிறது. கடந்த மாதம் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.172 குறைக்கப்பட்டு ரூ.1856.50க்கு விற்பனையானது. அதே நேரத்தில், வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை மே 1 அன்று முதல் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1103க்கு விற்க்கப்பட்டு வருகிறது.