மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டர் ரூ.450-க்கு வழங்குவோம்-அமித்ஷா..!

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் ரூ.450-க்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
“ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 65 லட்சம் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 3.70 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. 80 லட்சம் ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித் தந்தது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 82 லட்சம் சகோதரிகள் பயனடைந்துள்ளனர்.
மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் காஸ் விலை என்னவாக இருந்தாலும் சிலிண்டர் ரூ.450க்கு வழங்கப்படும்.36 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். மோடி அரசு அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளது. 200 கோடி தடுப்பூசிகளை போட்டு மக்களை கொரோனாவில் இருந்து காக்கும் பணியை மோடி ஜி செய்துள்ளார்” என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025