தினகரனை கைவிடும் குக்கர்!தொடர்ந்து அடம்பிடிக்கும் தேர்தல் ஆணையம்
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது தேர்தல் ஆணையம்.
அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று வாதிட்டது .கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது.
எனவே தினகரனின் வேட்பாளர்களை சுயேச்சைகளாகத்தான் பார்க்க முடியும். அதனால், நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது. அதேபோல், இடைத்தேர்தலுக்கும் ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது தேர்தல் ஆணையம்.
அதுபோல் இன்று இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கு இன்று முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது உச்சநீதிமன்றம்.