டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் டெல்லி திகார் சிறையில் உள்ளனர். பின்னர் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போனது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே குற்றவாளி வினய் குமார் சர்மா சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் தனக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மனநிலை சரியில்லாமல் இருப்பதால், உளவியல் சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடத்திய நீதிபதி குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது நிர்பயா பாலியல் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். இதனிடையே நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பவன் குமார் குப்தா மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…