புதிய ராபேல் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சர்ச்சை !!!!!

Published by
Priya

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை கருதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியது.

பழைய ஒப்பந்தம் :

Image result for manmohan singh rafale

கடந்த 2012ம் ஆண்டில் ஜனவரி மாதம்  மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும் இந்திய திட்டமிட்டிருந்தது.

இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும் என்றும்  மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று  பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தமானது.

உற்பத்தி செய்யும் நிறுவனம் :

இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இந்த விமானம் தயாரிப்பது  குறித்து  ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.

புதிய ஒப்பந்தம் :

 

அதற்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரபேல் விமானத்தின் விலை நிலவரம்: 

 

மன்மோகன் சிங் அரசு விமானத்தை வாங்கவிருந்த விலை சுமார் ரூ.79200 கோடி ஆகும் . ஆனால் ராபேல் விமானத்தை  தற்போதைய நரேந்திர மோடி அரசு சுமார் ரூ.58000கோடி விலைக்கு வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. மன்மோகன் சிங்கின் முந்தைய ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

புதிய ஒப்பந்தத்தினால்  ஏற்பட்ட சர்ச்சை:

ஒப்பந்தப்படி அனைத்தும் பிரான்சு நாட்டில் தயாரிக்கப்படும். மன்மோகன் சிங்கின் முந்தைய ஒப்பந்தத்தில், டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவித்தது. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் விமானத் துறையில் போர் விமானங்களைத் தயாரித்த அனுபவம் உள்ள நிறுவனம் ஆகும்.

இந்நிலையில் மோடியின் இன்றைய ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.  ஆனால் விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் விமானங்களைத் தயாரிக்கவுள்ளது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

 குற்றச்சாட்டு:

நரேந்திர மோடியின் அரசு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும்  காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம் தான் இரகசியம்  காக்கபடவேண்டும்.அதன் விலை அல்ல என குற்றம் சாட்டியது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டணியில்  இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

10 mins ago

நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…

12 mins ago

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

33 mins ago

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…

48 mins ago

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் தற்போதைய நிலை! வீடியோ வெளியிட்ட மா.சுப்பிரமணியன்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…

2 hours ago

கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

2 hours ago