அந்த சமூகத்தை புறக்கணிக்க வேண்டும்.! டெல்லி பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு.!
டெல்லியில் இந்து அமைப்பு சார்பாக நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி இஸ்லாமியரை தாக்கி பேசினார் என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லியில் மணீஷ் என்ற நபர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக டெல்லியில் 3 இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லில் இந்து அமைப்பினர் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் டெல்லி பாஜக எம்பி பர்வேஷ் வர்மா பங்கேற்றார்.
அப்போது பேசிய பாஜக எம்பி பர்வேஷ் வர்மா, ‘ குறிப்பிட்ட சமூகத்தினரை முற்றுலுமாக புறக்கணிக்க வேண்டும். எங்கு அந்த குறிப்பிட்ட இன மக்களை பார்க்கிறீர்களோ அவர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களிடம் வியாபார ரீதியில் எந்த பொருட்களையும் வாங்க கூடாது.’ என குறிப்பிட்டார்.
இவர் கூறிய இந்த கருத்து இஸ்லாமியர்களை மறைமுகமாக தாக்கி பேசியதாக கருதப்பட்டது. இது குறித்து அவரே பின்னர் விளக்கமளித்துள்ளார்.
அதில், ‘ நான் குறிப்பிட்டு கூறியது படுகொலையில் ஈடுபட்ட குடும்பத்தினருடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்று தான் கூறினேன். ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.’ என்று பாஜக எம்பி பர்வேஷ் வர்மா விளக்கமளித்தார்.