போராட்டம் தூண்டும் வகையில் ஹேஸ்டேக்.. 250 ட்விட்டர் கணக்கு முடக்கம்..!

Default Image

டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால்,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எல்லைப் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து, வன்முறை பரவாமல் இருக்க போராட்டம் தூண்டும் வகையில் ஹேஸ்டேக்கைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தூண்டும் வகையில் ஹேஸ்டேக்கை பயன்படுத்தியதாக கூறி 250 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

‘ModiPlanningFarmerGenocide’ என்ற ஹேஷ்டேக்கை மூலம் ட்விட்டரில் தவறான பதிவுகள் பதிவிடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதைதொடர்ந்து, 250 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்